தமிழ்நாடு - கர்நாடகா இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை தொடர்பாக, இன்று காவிரி மேலாண்மை வாரிய கூட்டம் நடைபெற்றது. அதன்படி, டெல்லியில் காவிரி மேலாண்மை வாரிய தலைவர் எஸ்.கே.ஹெல்தர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது, காவிரியில் இருந்து வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அக்டோபர் 16ம் தேதி முதல் 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்க காவிரி ஆணையம் ஆணையிட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது.
0 Comments