Recent Post

6/recent/ticker-posts

ஐரோப்பிய ஒன்றியமும், இந்தியாவும் முதலாவது கூட்டுக் கடற்படைப் பயிற்சி / First joint naval exercise between EU and India

ஐரோப்பிய ஒன்றியமும், இந்தியாவும் முதலாவது கூட்டுக் கடற்படைப் பயிற்சி / First joint naval exercise between EU and India

இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்தின் கப்பல்கள் கினியா வளைகுடாவில் கூட்டுக் கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டன. இந்தப் பிராந்தியத்தில் கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் இது மேற்கொள்ளப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியமும், இந்தியாவும், கினியா வளைகுடாவில் அக்டோபர் 24 அன்று, தங்கள் முதலாவதுக் கூட்டு கடற்படை பயிற்சியை நடத்தின. பிரஸ்ஸல்ஸில் 2023 அக்டோபர் 5 அன்று ஐரோப்பிய ஒன்றியம் - இந்தியா கடல்சார் பாதுகாப்பு உரையாடலின் மூன்றாவது கூட்டத்தைத் தொடர்ந்து இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

பயிற்சியின் போது, இந்திய கடற்படையின் கடலோர ரோந்து கப்பல் ஐ.என்.எஸ் சுமேதா, கினியா வளைகுடாவில் மூன்று ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் கப்பல்களுடன் இணைந்தது. 

இத்தாலிய கடற்படை கப்பல் ஐ.டி.எஸ் ஃபோஸ்காரி, பிரெஞ்சு கடற்படை கப்பல் எஃப்.எஸ் வென்டோஸ், ஸ்பானிஷ் கடற்படை கப்பல் டோர்னாடோ ஆகிய நான்கு கப்பல்களும் கானா கடற்கரையில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் தொடர்ச்சியான பயிற்சியை மேற்கொண்டன.

இதில் கப்பலில் ஏறும் பயிற்சி, பிரெஞ்சு கப்பல் வென்டோஸ் மற்றும் இந்திய கடற்படை கப்பல் சுமேதாவில் புறப்பட்ட ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி பறக்கும் பயிற்சி, கப்பல்களுக்கு இடையே பணியாளர்களை மாற்றுதல் ஆகியவை அடங்கும்.

இந்த நடவடிக்கைகள் கினியா வளைகுடாவில் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதில் கடலோர நாடுகள் மற்றும் யாவுண்டே கடல்பகுதி பாதுகாப்பை ஆதரிப்பதில் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகின்றன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel