Recent Post

6/recent/ticker-posts

கோவா கடல்சார் மாநாட்டின் (ஜி.எம்.சி) நான்காவது பதிப்பு / Fourth edition of Goa Maritime Conclave (GMC)

கோவா கடல்சார் மாநாட்டின் (ஜி.எம்.சி) நான்காவது பதிப்பு / Fourth edition of Goa Maritime Conclave (GMC)

TAMIL

பருவநிலை மாற்றம், கடற்கொள்ளை, பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல், அதிகப்படியான மீன்பிடித்தல் மற்றும் ஆழ்கடலில் வர்த்தக சுதந்திரம் போன்ற பொதுவான கடல்சார் சவால்களைத் திறம்படச் சமாளிக்க இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பன்னாட்டு கூட்டு தணிப்பு கட்டமைப்புகளை நிறுவுமாறு பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்தார். கோவா கடல்சார் மாநாட்டின் (ஜி.எம்.சி) நான்காவது பதிப்பில் இன்று அவர் சிறப்புரையாற்றினார்.

கடந்த 29ம் தேதி தொடங்கிய மூன்று நாள் மாநாட்டில், பாதுகாப்பு பிரதிநிதி கொமோரோஸ் திரு முகமது அலி யூசோபா மற்றும் பங்களாதேஷ், இந்தோனேசியா, மடகாஸ்கர், மலேசியா, மாலத்தீவுகள், மொரிஷியஸ், மியான்மர், சீஷெல்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து ஆகிய பதினொரு இந்தியப் பெருங்கடல் நாடுகளின் கடற்படைத் தலைவர்கள், கடல்சார் படைகளின் தலைவர்கள், மூத்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நான்காவது பதிப்பின் கருப்பொருள்' இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு பொதுவான கடல்சார் முன்னுரிமைகளை கூட்டு தணிப்பு கட்டமைப்புகளாக மாற்றுதல்' என்பதாகும். 

கோவாவின் கடற்படை போர் கல்லூரியின் ஏற்பாட்டில் இந்த மாநாட்டின் போது பல அமர்வுகள் நடத்தப்படுகின்றன. சிறந்த பேச்சாளர்கள் மற்றும் பாட வல்லுநர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றன.

ENGLISH

Defense Minister Mr. Rajnath Singh called for the establishment of international joint mitigation frameworks in the Indian Ocean region to effectively deal with common maritime challenges such as climate change, piracy, terrorism, drug trafficking, overfishing and freedom of trade in the deep sea. He was addressing the fourth edition of the Goa Maritime Conference (GMC) today.

In a three-day conference that started on the 29th, Defense Representative of Comoros, Mr. Mohamed Ali Youssoba, and the heads of naval forces, chiefs of maritime forces, and senior Representatives have attended.

The theme of this fourth edition is 'Transforming Maritime Security Common Maritime Priorities into Joint Mitigation Frameworks in the Indian Ocean Region'. Organized by the Naval War College, Goa, several sessions are conducted during the conference. Discussions are conducted with eminent speakers and subject experts.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel