உலகின் மிகப்பெரிய விஸ்கி ருசிக்கும் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். அந்தவகையில், நடப்பாண்டு நடைபெற்ற போட்டியில், உலகெங்கிலும் உள்ள 100 வகையான விஸ்கிகள் ருசிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில், இந்திய தயாரிப்பான இண்ட்ரி விஸ்கியின் தீபாவளி கலெக்ஷன் பதிப்பு 2023ஆனது, 'டபுள் கோல்ட் பெஸ்ட் இன் ஷோ' விருதைப் பெற்றது.
விஸ்கிஸ் ஆஃப் தி வேர்ல்ட் விருதில் கலந்து கொள்ளும் விஸ்கிகள் பல சுற்றுகள் போட்டியிடும். அவற்றின் சுவை ஒவ்வொரு கட்டத்திலும், பல்வேறு வகைகளில் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அல்கோ-பெவ் துறையை சேர்ந்த மூத்த சுவைதயாரிப்பாளர்கள் கொண்ட நிபுணர்கள் குழு, ஒவ்வொரு கட்டத்திலும் சிறந்த விஸ்கியை அறிவித்து இறுதியாக, உலகின் தலைசிறந்த விஸ்கி தேர்வு செய்யப்படுகிறது.
அமெரிக்க சிங்கிள் மால்ட், ஸ்காட்ச் விஸ்கி, போர்பன்ஸ், கனடியன் விஸ்கி, ஆஸ்திரேலிய சிங்கிள் மால்ட் மற்றும் பிரிட்டிஷ் சிங்கிள் மால்ட் போன்ற நூற்றுக்கணக்கான சர்வதேச பிராண்டுகளை இந்திய பீட் கிளாஸ் விஸ்கியான இண்ட்ரி விஸ்கி தோற்கடித்துள்ளது.
மால்ட் பார்லியை உலர்த்துவதற்குப் பயன்படுத்தப்படும் கரி நெருப்பால் வெளியிடப்படும் கலவைகளால் ஒரு ஸ்மோக்கி ஃப்ளேவர் கொடுக்கப்படும் விஸ்கியே பீட் கிளாஸ் (Peated whisky) விஸ்கி எனப்படுகிறது.
டோக்கியோ விஸ்கி மற்றும் ஸ்பிரிட்ஸ் போட்டி 2023, லாஸ் வேகாஸில் நடந்த
சர்வதேச விஸ்கி போட்டியான ஐம்பது சிறந்த உலக விஸ்கிகள் 2022 விருது உள்ளிட்டவைகளை இதற்கு முன்பு இண்ட்ரியின் சிங்கிள் மால்ட் டிரினி வென்றுள்ளது. மேலும், உலகின் டாப் 20 விஸ்கிகள் பட்டியலிலும் இண்ட்ரியின் சிங்கிள் மால்ட் டிரினி இடம்பெற்றுள்ளது.
0 Comments