TAMIL
கிழக்கு ஆப்ரிக்க நாடான டான்சானியாவின் அதிபர் சாமியா சுலுஹூ ஹாசன், நான்கு நாட்கள் பயணமாக புதுடில்லி வந்தார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, இரு தரப்பு உறவுகள் குறித்து, அவருடன் பிரதமர் மோடி பேச்சு நடத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல இரு தலைவர்களும் முன்வந்துள்ளனர்.
டிஜிட்டல் பரிவர்த்தனை, கலாசாரம், விளையாட்டு, உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதைத் தவிர, ராணுவத் துறையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் இரு நாடுகளும் முக்கிய பங்காளிகளாக உள்ளன. இதையடுத்து, பரஸ்பரம் அந்தந்த நாடுகளின் கரன்சியில் வர்த்தகம் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ENGLISH
President of East African country Tanzania, Samia Suluhu Hassan, arrived in New Delhi on a four-day visit. He was accorded a red carpet reception at the Presidential Palace. Following this, Prime Minister Modi held a discussion with him on bilateral relations. Both leaders have come forward to take the relationship between the two countries to the next level.
Agreements were signed to cooperate in digital transactions, culture, sports, etc. Apart from this, an agreement was also signed regarding plans for the next five years in the military sector. Both countries are important partners in trade and investment. Subsequently, it has been decided to trade in the currencies of the respective countries.
0 Comments