Recent Post

6/recent/ticker-posts

இந்தியா, சவுதி அரேபியா இடையே மூன்று முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து / MOU between India, Saudi Arabia

இந்தியா, சவுதி அரேபியா இடையே மூன்று முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து / MOU between India, Saudi Arabia

இந்தியாவும் சவுதி அரேபியாவும் ரியாத்தில் மின்சார தொடர்புகள், பசுமை, சுத்தமான ஹைட்ரஜன் மற்றும் விநியோக சங்கிலிகள் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

ரியாத்தில் இன்று மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் திரு. ஆர்.கே.சிங் மற்றும் சவூதி அரேபிய அரசின் எரிசக்தி துறை அமைச்சர் திரு. அப்துல் அஜீஸ் பின் சல்மான் அல்-சவுத் ஆகியோர் இடையே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், மின்சார தொடர்புகள் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கான பொதுவான கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பசுமை, சுத்தமான ஹைட்ரஜன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் இணை உற்பத்தி, மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் பயன்படுத்தப்படும் பொருட்களின் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் நெகிழ்வான விநியோக சங்கிலிகளை நிறுவுதல் ஆகியவற்றையும் நோக்கமாக கொண்டிருக்கிறது.

முன்னதாக, சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெறும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவின் காலநிலை வாரம் 2023 இல் இந்திய அரசின் மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங் தலைமையிலான இந்திய தூதுக்குழு பங்கேற்றது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel