ஒடிசா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் சில்லறை விற்பனையாளர்களின் திறன்களை வலுப்படுத்த, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் (எம்.எஸ்.டி.இ) கீழ் செயல்படும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (என்.எஸ்.டி.சி) கோகோ கோலா இந்தியா நிறுவனத்துடன் இணைந்து செயல்படவுள்ளது.
இதற்காக திறன் இந்தியா இயக்கத்தின் “சூப்பர் பவர் சில்லறை விற்பனையாளர் திட்டம்” அன்று 15-10-2023 அறிமுகம் செய்யப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் இத்திட்டம் முதல்கட்டமாக செயல்படுத்தப்படுகிறது.
மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இந்த கூட்டுச் செயல்பாட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கோகோ கோலா இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் திரு வேத் மணி திவாரி, மற்றும் திரு சங்கேத் ரே ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
0 Comments