Recent Post

6/recent/ticker-posts

ஒடிசா மற்றும் திரிபுரா மாநிலத்திற்கு புதிய ஆளுநர்கள் நியமனம் / New governors appointed for Odisha and Tripura states

ஒடிசா மற்றும் திரிபுரா மாநிலத்திற்கு புதிய ஆளுநர்கள் நியமனம் / New governors appointed for Odisha and Tripura states

ஒடிசா மற்றும் திரிபுரா மாநிலத்திற்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒடிசா ஆளுநராக ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், திரிபுரா ஆளுநராக தெலங்கானாவை சேர்ந்த பாஜக நிர்வாகி இந்திரசேனா ரெட்டி நல்லு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஒடிசா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரகுபர் தாஸ் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆவார். 2014 முதல் 2019 வரையில் ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்தார். தற்போது இவர், பாஜகவில் தேசிய அளவில் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.

திரு. நல்லு தெலுங்கானாவைச் சேர்ந்த பாஜக தலைவர் மற்றும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஆவார். தற்போது இவர் திரிபுரா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel