தமிழ்நாடு மாநில விலங்கான வரையாடு, அழிந்து வரும் உயிரினமாக இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வரையாடு இனத்தைப் பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் நாட்டிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை 25 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், வனத்துறை சார்பில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வரையாடுகளை பாதுகாப்பதற்கான திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வரையாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக புத்தகங்களை வழங்கினார்.
இந்தத் திட்டத்தின் மூலம், ஆண்டுக்கு இருமுறை ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, டெலிமெட்ரிக் ரேடியோ காலரிங் பொருத்தி தொடர்ந்து பாதுகாத்தல், நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
0 Comments