நாட்டின் முதல் நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேசத்தில் தொடங்கிவைத்தார். மெட்ரோ ரயிலின் மேம்படுத்தப்பட்ட வடிவமான ரேபிட் ரயில் (Rapid Rail) சேவை நமோ பாரத் என்ற பெயரில் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இருந்து டெல்லி வழியாக, மீரட் செல்லும் நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர், ரயில் நிலைய வளாகத்தில் இருந்த வழித்தட மாதிரியை பிரதமர் பார்வையிட்டார். பின்னர், நமோ பாரத் ரயிலில் பயணம் செய்த பிரதமர் ரயில் பணியாளர்களிடமும், அதில் பயணம் செய்த மாணவியரிடமும் உரையாடினார்.
இரண்டு பிராந்தியங்களுக்கு இடையேயான இந்த அதிவேக ரயில்கள், பேருந்து நிலையங்கள், ரயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் என அனைத்தையும் ஒருங்கிணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், முக்கியமான இடங்களில் மட்டுமே நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, 180 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் செல்லும் அளவுக்கு வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments