TAMIL
இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று உயர்மட்ட கூட்டம் நடத்தினார். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டமான 'ககன்யான்' குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் இந்த கூட்டத்தில் அடுத்தக்கட்ட இந்தியாவின் விண்வெளி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது 'ககன்யான்' திட்டம் குறித்து பிரதமர் மோடியிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முதல் திட்டமான ககன்யான் திட்ட பணி தீவிரமாக நடந்து வருகிறது. ககன்யான் திட்டம் என்பது விண்ணில் செலுத்துவதற்கு முன்பு 20 முறை சோதனைகள் செய்யப்பட உள்ளது.
மேலும் 3 முறை ஆளில்லா விண்கலத்தை விண்ணில் செலுத்தி சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அக்டோபர் 21ல் ககன்யான் திட்டத்தின் சோதனை வாகனம் விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
அதன்பிறகு பிரதமர் மோடி பல்வேறு அறிவுகளை இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வழங்கினார். அதாவது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை 2025ம் ஆண்டுக்குள் செயல்படுத்த வேண்டும். 2035ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு என்று பிரத்யேகமாக இந்திய விண்வெளி நிலையத்தை அமைக்க வேண்டும்.
மேலும் 2040ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருந்து நிலவுக்கு விண்வெளி வீரரரை அனுப்ப வேண்டும். இந்த இலக்குகளை நிறைவேற்றும் வகையில் தீவிரமாக செயல்பட வேண்டும்.
விண்வெளி துறையில் நிலவு குறித்த ஆய்வுக்கான சார்ட்டுகளை உருவாக்கி படிப்படியாக அதனை நிறைவேற்றம் செய்ய வேண்டும். இந்தியாவின் அடுத்த தலைமுறை ராக்கெட்டான என்ஜிஎல்வி, புதிய விண்வெளி ஏவுதளம் அமைத்தல், ஆய்வு மையங்கள் உள்ளிட்டவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்'' என பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
ENGLISH
Prime Minister Narendra Modi today held a high-level meeting with ISRO scientists. India's first manned space program 'Kaganyan' was discussed. The meeting also discussed the next phase of India's space projects. Then Prime Minister Modi was briefed about the 'Kaganyan' project.
Gaganyaan, India's first manned space mission, is in full swing. The Gaganyaan project is to undergo 20 tests before launch. Three more unmanned spacecraft are to be launched and tested. Scientists said that on October 21, the test vehicle of Kaganyan project will be tested in space.
After that PM Modi imparted various knowledge to ISRO scientists. That means the Kaganyan project to send humans into space should be implemented by 2025. By 2035, an Indian space station should be set up exclusively for India.
And by 2040 India should send an astronaut to the moon. Work hard to achieve these goals. Charts for the study of the Moon in the space sector should be developed and implemented gradually. India's next generation rocket, the NGLV, should be given special attention for setting up a new space launch pad, research centers, etc., Prime Minister Modi instructed.
0 Comments