Recent Post

6/recent/ticker-posts

செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக சுப்மன் கில் தேர்வு - ஐசிசி அறிவிப்பு / SHUBMAN GILL NAMED PLAYER OF THE MONTH FOR SEPTEMBER 2023

செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக சுப்மன் கில் தேர்வு - ஐசிசி அறிவிப்பு / SHUBMAN GILL NAMED PLAYER OF THE MONTH FOR SEPTEMBER 2023

ஐசிசி உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் சுப்மன் கில்லும் இடம்பெற்றிருந்தார்.

குறைந்த வயதான போதிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக வலம் வருகிறார். மேலும் கிரிக்கெட் தரவரிசை பட்டியலிலும் அவர் பல சாதனைகளை படைத்து வருகிறார்.

சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஷாம் 863 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் இருந்தார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 59 புள்ளிகளை எடுத்து 2வது இடத்துக்கு முன்னேறினார். இந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த ஆட்டக்காரர் என சுப்மன் கில் தேர்வு செய்து ஐசிசி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel