பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் ஜப்பானின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இடையே ஜப்பான்-இந்தியா செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலி கூட்டாண்மை குறித்து ஜூலை 2023 இல் கையெழுத்திடப்பட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தொழில்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் முன்னேற்றத்திற்கு செமிகண்டக்டரின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியை மேம்படுத்துவதில் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் விரும்புகிறது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தரப்பினரும் கையொப்பமிட்ட தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.
ஜி 2 ஜி மற்றும் பி 2 பி இருதரப்பு ஒத்துழைப்பு இரண்டும் நெகிழ்வான செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியை மேம்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் மேம்பட்ட ஒத்துழைப்பை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
0 Comments