- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியக் குடியரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே ஆகஸ்ட் 11 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- டிஜிட்டல் மாற்றத்திற்கான மக்கள்தொகை அளவுகோலில் செயல்படுத்தப்பட்ட வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்வதில் ஒத்துழைப்பது தொடர்பாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளின் டிஜிட்டல் முன்முயற்சிகளை செயல்படுத்துவதில் நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் அனுபவங்கள், டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகள் ஆகியவற்றை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தரப்பினரும் கையொப்பமிட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் மற்றும் 3 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.
- டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (டிபிஐ) துறையில், அரசுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கிடையே இருதரப்பு ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்.
- தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் மேம்பட்ட ஒத்துழைப்பை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
0 Comments