தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் பேரவைத் தலைவர் அப்பாவு உரையுடன் இன்று (நவ. 18) காலை தொடங்கியது. இதில், ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனித்தீர்மானத்தை முன்வைத்தார்.
அது குறித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர்கள் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துப் பேசினர்.
முடிவில், ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் தொடர்பாக முதல்வர் கொண்டுவந்த தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இதன்மூலம் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இவை ஆளுநரின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பப்படவுள்ளன.
0 Comments