Recent Post

6/recent/ticker-posts

விமானப்படைக்கு கூடுதல் போர் விமானங்கள் வாங்க 1.1 லட்சம் கோடி - பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் / 1.1 lakh crore to buy more fighter jets for Air Force - Security Council approves

விமானப்படைக்கு கூடுதல் போர் விமானங்கள் வாங்க 1.1 லட்சம் கோடி - பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் / 1.1 lakh crore to buy more fighter jets for Air Force - Security Council approves

இந்திய ராணுவத்திற்கு 97 தேஜாஸ் விமானங்கள் மற்றும் 156 பிரசாந்த் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ரூ.1.1 லட்சம் கோடி மதிப்பலான ஒப்பந்தங்களுக்கு மத்திய பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இவை இரண்டும் உள்நாட்டிலேயே உருவாக்கப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய விமானப்படைக்கு தேஜாஸ் மார்க் 1-ஏ போர் விமானங்களும், விமானப்படை மற்றும் ராணுவத்திற்கு ஹெலிகாப்டர்களும் வாங்கப்பட உள்ளன. இது தவிர வேறு ஒப்பந்தங்களுக்கும் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது இந்திய வரலாற்றில் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பெற்ற மிகப்பெரிய ஆர்டர் ஆகும். பேச்சுவார்த்தைக்கு பிறகு, பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு விலையை இறுதி செய்யும். விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel