15 பி நான்கு திட்டத்தில் 3-வது திட்டமான ஏவுகணை அழிப்பு போர்க்கப்பல் 12706 இம்பால் சேவையை 2023, நவம்பர் 28, அன்று புதுதில்லியில் மணிப்பூர் முதலமைச்சர் திரு என் பைரேன் சிங் முன்னிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
காங்லா அரண்மனை, 'காங்லா-சா' ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட இம்பாலைத் தொடங்கிவைப்பது இந்தியாவின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்காக தியாகம் செய்த மணிப்பூர் மக்களுக்குச் செய்யும் உரிய மரியாதையாகும்.
முகடு வடிவமைப்பு இடதுபுறத்தில் காங்லா அரண்மனையையும், வலதுபுறத்தில் 'காங்லா-சா'-வையும் சித்தரிக்கிறது. காங்லா அரண்மனை மணிப்பூரின் ஒரு முக்கியமான வரலாற்று, தொல்லியல் தளமாகும்.
டிராகன் தலை மற்றும் சிங்கத்தின் உடலுடன், 'காங்லா-சா' மணிப்பூர் வரலாற்றில் ஒரு புராண உயிரினமாகும். மேலும் இது அதன் மக்களின் பாதுகாவலராக அடையாளப்படுத்தப்படுகிறது. 'காங்லா-சா' மணிப்பூரின் மாநிலச் சின்னமாகும்.
0 Comments