Recent Post

6/recent/ticker-posts

13வது தேசிய சீனியர் ஹாக்கி போட்டி / 13th National Senior Hockey Tournament

13வது தேசிய சீனியர் ஹாக்கி போட்டி / 13th National Senior Hockey Tournament

ஆடவருக்கான 13-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட 60 நிமிடங்களில் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து வெற்றி யாளரை தீர்மானிக்க ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில்தமிழ்நாடு 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 3-வது இடம் பிடித்த தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஹரியாணா - பஞ்சாப் அணிகள் மோதின. நிர்ணயிக்கப் பட்ட 60 நிமிடங்களின் முடிவில் ஆட்டம் 2-2 என சமநிலையில் இருந்தது. இதில் பஞ்சாப் அணி 9-8 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. 

தேசிய சீனியர் ஹாக்கி போட்டியில் அந்த அணி பட்டம் வெல்வது இது 4-வது முறையாகும். பட்டம் வென்ற அந்த அணி வீரர்களுக்கு தங்கப் பதக்கம் அணிவிக்கப்பட்டது. 2-வது இடம் பெற்ற ஹரியாணா வெள்ளிப் பதக்கம் பெற்றது. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel