மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை, இந்தியப் பெருங்கடல் சூரை மீன் ஆணையத்தின் தரவு சேகரிப்பு மற்றும் புள்ளிவிவரத்திற்கான 19-வது செயற்குழுவை 2023 நவம்பர் 28 முதல் டிசம்பர் 2 வரை நடத்துகிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலில் இந்தக் கூட்டம் தொடங்கியது.
இது உலகெங்கிலும் உள்ள சூரை மீன்வளத் துறையில் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்களை ஒருங்கிணைக்கும் ஒரு முக்கியமான கூட்டமாகும்.
இக்கூட்டத்தில் மத்திய அரசின் மீன்வளத் துறை இணைச் செயலாளர் திருமதி நீது குமாரி பிரசாத், மகாராஷ்டிர அரசின் மீன்வளத் துறை ஆணையர் திரு அதுல் பட்னே ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தோனேசியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற நாடுகள், சீஷெல்ஸ், தான்சானியா, ஈரான், தாய்லாந்து, ஜப்பான், இலங்கை, ஓமன், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் இந்தக் கூட்டத்தில் நேரில் கலந்து கொள்கின்றனர்.
இது தவிர, பல்வேறு நாடுகள், ஐ.ஓ.டி.சி மற்றும் அறிவியல் அமைப்புகளைச் சேர்ந்த பல பங்கேற்பாளர்கள் மெய்நிகர் பயன்முறையிலும் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து 2023 டிசம்பர் 4 முதல் 8 வரை இதே இடத்தில் நடைபெறும் ஐ.ஓ.டி.சி.யின் முக்கிய அறிவியல் குழுக் கூட்டம், இந்தியப் பெருங்கடலில் உள்ள சூரை மீன் மற்றும் சூரை போன்ற உயிரினங்களின் நிலையான மேலாண்மை தொடர்பான அறிவியல் பரிந்துரைகளுக்காக டபிள்யூ.பி.டி.சி.எஸ் மற்றும் பல்வேறு பணிக்குழுக்களின் பரிந்துரைகளை பரிசீலிக்கும்.
சூரை மீன்கள், ஷீலா மீன்கள், சுறா மீன்கள், திருக்கை மீன்கள் போன்ற பிற பெரிய மீன் இனங்கள் மகத்தான பொருளாதார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. சூரை மீன்கள் மட்டும் ஆண்டுக்கு 41 பில்லியன் அமெரிக்க டாலர் (2018 ஆம் ஆண்டில்) வர்த்தகத்திற்கு பங்களிக்கின்றன
0 Comments