Recent Post

6/recent/ticker-posts

அக்டோபர் 2023 மாதத்தில் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.72 லட்சம் கோடி / Goods and Services Tax (GST) in October 2023 is Rs 1.72 lakh crore

அக்டோபர் 2023 மாதத்தில் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.72 லட்சம் கோடி / Goods and Services Tax (GST) in October 2023 is Rs 1.72 lakh crore

நாட்டில் கடந்த அக்டோபர் மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.72 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் வசூலானதைவிட 13 சதவீதம் அதிகமாகும்.

நடப்பு நிதியாண்டில் 2-ஆவது முறையாக ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.70 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.52 லட்சம் கோடியாக இருந்தது. 

நடப்பு நிதியாண்டில் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1.87 லட்சம் கோடி வசூலான நிலையில், இரண்டாவது அதிகபட்ச தொகையாக அக்டோபரில் வசூலாகியிருக்கிறது. 

சராசரியாக மாதம் ரூ.1.66 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 11 சதவீதம் அதிகமாகும்.

கடந்த ஆண்டு ஜிஎஸ்டி ரூ.8,93,334 கோடி வசூலாகியிருந்து; சராசரி மாத வசூல் ரூ.1.49 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த ஆகஸ்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.59 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த ஏப்ரலில் சாதனை அளவாக ரூ.1.87 லட்சம் கோடி வசூலாகியிருந்தது. விழாக் காலம் என்பதால், எதிா்வரும் மாதங்களில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிக்கும் என்று துறைசாா் நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel