Recent Post

6/recent/ticker-posts

ஆசியான் இந்தியா சிறுதானியத் திருவிழா 2023 / ASEAN INDIA MILLET FESTIVAL 2023

ஆசியான் இந்தியா சிறுதானியத் திருவிழா 2023 / ASEAN INDIA MILLET FESTIVAL 2023

TAMIL

ஆசியான் இந்தியா சிறுதானியத் திருவிழா 2023 / ASEAN INDIA MILLET FESTIVAL 2023: ஆசியான் நாடுகளுக்கான இந்தியத் தூதரகம், வேளாண்மை, மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்துடன் இணைந்து ஆசியான்-இந்தியா சிறுதானியத் திருவிழா 2023ஐ இந்தோனேசியாவில் நவம்பர் 22 முதல் 26 வரை நடத்துகிறது.

இந்தோனேசியாவின் தெற்கு ஜகார்த்தாவில் உள்ள முக்கிய பெரும் வணிக வளாகமான கோட்டா கசாபிளாங்கா-வில் திருவிழாவின் தொடக்க அமர்வு நடைபெற்றது.

திருவிழாவின் ஒரு பகுதியாக சிறுதானியங்களை மையமாகக் கொண்ட கண்காட்சி நடத்தப்படுகிறது, இதில் சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட புத்தொழில் நிறுவனங்கள், இந்திய சமையல் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

ஆசியான் உறுப்பு நாடுகளான புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் சிறுதானியங்கள், அது சார்ந்த பொருட்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், சந்தையை உருவாக்குவதும் இத்திருவிழாவின் நோக்கமாகும்.

இந்தத் திருவிழாவின் போது, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை இந்தியாவில் இருந்து ஒரு தூதுக்குழுவை வழிநடத்துகிறது, இது சமையல்கலைஞர்கள், புத்தொழில் நிறுவனங்கள், வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழில்துறை தலைவர்கள், மாநில அதிகாரிகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய இந்திய சிறுதானிய சுற்றுச்சூழல் அமைப்பில் ஈடுபட்டுள்ள பல்வேறு தொழில் வல்லுநர்களாப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

நவம்பர் 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறும் இந்த நேரடி சமையல் பட்டறையில், இந்தியா, இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞர்கள் சிறுதானியங்களின் சமையல் திறனை வெளிப்படுத்துவார்கள்.

ENGLISH

ASEAN INDIA MILLET FESTIVAL 2023: The Embassy of India to ASEAN countries in collaboration with the Ministry of Agriculture and Farmers Welfare is organizing the ASEAN-India Small Grains Festival 2023 in Indonesia from November 22 to 26.

The opening session of the festival was held in Kota Casablanca, a major shopping mall in South Jakarta, Indonesia. As part of the festival, an exhibition focusing on small grains is organized, in which innovative companies based on small grains, Indian chefs participate.

The objective of the triennial event is to create awareness and create a market for small grains and related products in ASEAN member countries like Brunei, Cambodia, Indonesia, Laos, Malaysia, Myanmar, Philippines, Singapore, Thailand and Vietnam.

During this festival, the Department of Agriculture and Farmers Welfare leads a delegation from India representing various professionals involved in the Indian small grains ecosystem, including chefs, industrialists, representatives of agro producer organizations, industry leaders, state officials and others.

From November 23rd to 26th, this live cooking workshop will showcase the culinary potential of small grains by renowned chefs from India and Indonesia.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel