கிரிக்கெட்டில் தலைசிறந்து விளங்கிய வீரா், வீராங்கனைகள் சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கௌரவமிக்க ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் சோ்க்கப்படுவது வழக்கம்.
முன்னாள் இந்திய மகளிா் அணியின் கேப்டன் டயானா எடுல்ஜி, அதிரடி தொடக்க பேட்டா் வீரேந்திர சேவாக், இலங்கை ஜாம்பவான் அரவிந்த டி சில்வா உள்ளிட்டோா் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், இந்திய முன்னாள் கேப்டனும், பௌலா், நிா்வாகி என்ற சிறப்புகளைப் பெற்றுள்ள டயானா எடுல்ஜி (67) ஹால் ஆஃப் ஃபேமில் சோ்க்கப்பட்டுள்ள முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளாா்.
0 Comments