Recent Post

6/recent/ticker-posts

இந்தியா - இலங்கை கூட்டுப் பயிற்சி மித்ரா சக்தி – 2023 / India-Sri Lanka Joint Exercise Mitra Shakti – 2023

இந்தியா - இலங்கை கூட்டுப் பயிற்சி மித்ரா சக்தி – 2023 / India-Sri Lanka Joint Exercise Mitra Shakti – 2023

இந்தியா – இலங்கை இடையேயான 9-வது கூட்டு ராணுவப் பயிற்சி "மித்ரா சக்தி -2023" இன்று அவுந்த் (புனே) ல் தொடங்கியது. இந்தப் பயிற்சி 2023 நவம்பர் 16 முதல் 29 வரை நடத்தப்படுகிறது. 120 வீரர்களைக் கொண்ட இந்தியப் படைப்பிரிவில் முக்கியமாக மராத்தா தரைப்படை பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். 

இலங்கை தரப்பில் 53 தரைப்படை பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்திய விமானப்படையைச் சேர்ந்த 15 வீரர்களும், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 5 வீரர்களும் இந்தப் பயிற்சியில் பங்கேற்கின்றனர்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது கூட்டு எதிர்வினைகளை ஒருங்கிணைப்பது இந்தப் பயிற்சியின் நோக்கமாகும். தாக்குதல், தேடுதல் மற்றும் அழித்தல், போன்ற உத்தி சார்ந்த நடவடிக்கைகளை இரு தரப்பினரும் மேற்கொள்வார்கள். 

கூடுதலாக, ராணுவ தற்காப்பு கலைகள், துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் யோகா உடற்பயிற்சி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.

மித்ரா சக்தி - 2023 பயிற்சியில் ஹெலிகாப்டர்கள் தவிர ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி அமைப்புகள் பயன்படுத்தப்படும். ஹெலிபேட்களை பாதுகாப்பது மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது காயமடைந்தவர்களை வெளியேற்றுவது தொடர்பான ஒத்திகைகளும் இரு தரப்பினராலும் கூட்டாக ஒத்திகை செய்யப்படும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel