TAMIL
கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் மோடி, அப்போதைய ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்க்கெல் ஆகியோரால் இந்தோ-ஜெர்மனி இளம் தலைவர்கள் கூட்டமைப்பு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கிடையே பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதும், புவிசார் அரசியல் தொடர்புகளை வலுப்படுத்துவதும் இதன் நோக்கம் ஆகும்.
இக்கூட்டமைப்பின் முக்கிய செயல்பாடாக ஜெர்மனி மற்றும் இந்திய இளம் தலைவர்களை கண்டறிந்து, வணிகம், அரசியல், அறிவியல், தொழில்நுட்ப முன் னேற்றம் மற்றும் கலாச்சார செயல் பாடுகள் தொடர்பாக ஆண்டுக்கு ஒருமுறை இளம் தலைவர்கள் மாநாடு நடத்தப்படுகிறது.
ஒரு வருடம் ஜெர்மனியிலும் அடுத்த வருடம் இந்தியாவிலும் என இம்மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்குபெற தலைமைப் பண்புடன் சிறப்பாக செயல்பட்டு வரும் 20 இந்திய இளம் தலைவர்கள் மற்றும் 20 ஜெர்மனிய இளம் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநாட்டுக்கு அழைக்கப்படுகின்றனர்.
ENGLISH
In 2017, the Indo-German Young Leaders Consortium was launched by Prime Minister Modi and then German Chancellor Angela Merkel. It aims to promote economic development and strengthen geopolitical ties between India and Germany.
The main activity of the association is to identify young leaders from Germany and India and conduct an annual Young Leaders Conference on Business, Politics, Science, Technological Advancement and Cultural Activities.
This conference is being held in Germany one year and in India the next year. 20 young leaders from India and 20 young leaders from Germany are selected and invited to the conference.
0 Comments