TAMIL
பணியாளர்களின் நல்வாழ்வு குறித்த சர்வதேச ஆய்வு முடிவுகள் 2023 / INTERNATIONAL STUDY ON EMPLOYMENT WELFARE 2023: உலகம் முழுவதும் பணியாற்றும் பணியாளர்களின் நல்வாழ்வைக் கணக்கிட மெக்கின்ஸி மருத்துவ கழகத்தால் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 30 நாடுகளில் பணியாற்றும் 30,000 ஊழியர்களிடம் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
துருக்கி, 78 சதவீதம் பெற்று முதலிடத்திலும் இந்தியா 76 சதவீத அளவில் இரண்டாம் இடத்திலும் சீனா 75 சதவீதத்தோடு மூன்றாம் இடத்திலும் உள்ளது.
ஜப்பான் 25 சதவீதம் பெற்று கடைசி இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
வாழ்நாள் முழுவதுக்குமான உறுதியான வேலை, வேலை பாதுகாப்பு உள்ளிட்டவை ஜப்பானில் இருப்பினும் அங்கு பணியாற்றும் பணியாளர்கள் வேலை பிடிக்காத சூழலில் வேறு வேலைக்கு மாற இயலவில்லை என்பதால் ஜப்பான் பின்னடைவில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பணியாளர்களின் உடல், மனம், சமூக மற்றும் ஆன்ம நலத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் நேர்மறையான வேலை அனுபவம் உள்ள இடங்களில் பணியாற்றும் பணியாளர்கள் ஆரோக்கியத்தோடும் வேலையில் உற்சாகத்தோடும் இருக்க முடிவதாகத் தெரிவித்துள்ளனர்.
ENGLISH
INTERNATIONAL STUDY ON EMPLOYMENT WELFARE 2023: Surveyed by McKinsey Medical Institute to measure the well-being of employees working around the world. The results of the study are based on data taken from 30,000 employees working in 30 countries. Turkey ranks first with 78 percent, followed by India with 76 percent and China with 75 percent.
Japan is listed last with 25 percent. Japan is said to be lagging behind because it is not able to switch to another job in an environment where employees do not like the job.
Based on the physical, mental, social and spiritual well-being of employees, this study found that employees who work in places with a positive work experience are healthier and more motivated at work.
0 Comments