மத்திய அமெரிக்காவில் உள்ள எல் சல்வேடார் (El Salvador) நாட்டின் தலைநகரான சான் சல்வேடார் (San Salvador) நகரில் நடைபெற்ற போட்டியில் 'Nicaragua'-வைச் சேர்ந்த மாடல் ஷெய்னிஸ் அலான்ட்ரா பலாசியோஸ் (Sheynnis Alondra Palacios) 72-வது பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார்.
அரையிறுதிச் சுற்றில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஸ்விம்சூட் சுற்று எல்லாம் முடிந்து இறுதியில் 10- பேர் போட்டியிட்டார்கள். இந்தியாவின் ஸ்வேதா ஷார்தா (Shweta Sharda) அரையிறுதிப் போட்டியோடு வெளியேறினார். முதல் பத்து இடங்களில் இடம்பெறவில்லை.
நிக்கராகுவாவைச் சேர்ந்தவர் முதல் முறையாக பிரபஞ்ச அழகி பட்டம் பெறுவது இதுவே முதல் முறை. தாய்லாந்து நாட்டின் ஆண்டனியோ ப்ரொசில்ட் (Anntonia Porsild) இரண்டாம் இடம் பெற்றார். ஆஸ்திரேலியாவின் மராயோ வில்சன் (Moraya Wilson) மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.
0 Comments