Recent Post

6/recent/ticker-posts

கிலோ ரூ. 27.50-க்கு 'பாரத்' ஆட்டா விற்பனையை மத்திய அரசு தொடங்கியுள்ளது / Central government has started selling 'Bharat' auto at Rs. 27.50

கிலோ ரூ. 27.50-க்கு 'பாரத்' ஆட்டா விற்பனையை மத்திய அரசு தொடங்கியுள்ளது / Central government has started selling 'Bharat' auto at Rs. 27.50

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், 'பாரத்' பிராண்டின் கீழ் கோதுமை மாவு (ஆட்டா) விற்பனை செய்வதற்கான 100 நடமாடும் வேன் வாகனங்களைப் புதுதில்லியில் உள்ள கடமைப் பாதையில் இன்று (06-11-2023) கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இதில் ஆட்டா ஒரு கிலோவுக்கு ரூ. 27.50-க்கு மிகாமல் சில்லறை விலையில் கிடைக்கும். சாதாரண நுகர்வோரின் நலனுக்காக மத்திய அரசு எடுத்துள்ள தொடர் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.

'பாரத்' பிராண்ட் ஆட்டாவின் சில்லறை விற்பனையைத் தொடங்குவது சந்தையில் மலிவு விலையில் விநியோகத்தை அதிகரிக்கும். மேலும் இந்த முக்கியமான உணவுப் பொருளின் விலை குறைய உதவும்.

'பாரத்' அட்டா இன்று முதல் கேந்திரிய பந்தர், நாஃபெட் மற்றும் என்.சி.சி.எஃப் ஆகியவற்றின் அனைத்து கடைகள் மற்றும் நடமாடும் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும். அத்துடன் பிற கூட்டுறவு, சில்லறை விற்பனை நிலையங்களுக்கும் இதன் விற்பனை விரிவுபடுத்தப்படும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel