ஒன்றிய அரசின் நவம்பர் மாத நிதி பங்கீடை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. மொத்தமாக ரூ.72,961 கோடியை ஒன்றிய அரசு விடுவித்த நிலையில், இதில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்துக்கு ரூ.13,088.51 கோடியும், பீகாருக்கு ரூ.7,338.44 கோடியும், மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.5,727.44 கோடியம், மேற்கு வங்கத்துக்கு ரூ.5,488.88 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.4,396.64 கோடியும், மகாராஷ்டிராவுக்கு ரூ.4,608.96 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் தமிழ்நாட்டுக்கு ரூ.2,976.1 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் பரப்பளவு, மக்கள் தொகை, வரி வருவாய், தனிநபர் வருவாய், காடுகளின் பரப்பளவு ஆகியவற்றுக்கு ஏற்ப வரிப் பகிர்வு தொகை அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது என்று சொல்லப்பட்டாலும், மக்கள் தொகையை மட்டுமே கணக்கீடாக வைத்து ஒன்றிய அரசு நிதி ஒதுக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments