Recent Post

6/recent/ticker-posts

தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 5.80 சதவீதமாக சரிவு / Industrial sector production growth declines to 5.80 percent

தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 5.80 சதவீதமாக சரிவு / Industrial sector production growth declines to 5.80 percent

நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த செப்டம்பரில் 5.80 சதவீதமாக சரிவைக் கண்டுள்ளது. இதுவே இதற்கு முந்தைய மாதமான ஆகஸ்டில் 10.30 சதவீதமாக அதிகரித்திருந்தது.

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலத்தில், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 7.10 சதவீதமாக இருந்தது, நடப்பு நிதியாண்டில் ஆறு சதவீதமாக சரிவைக் கண்டுள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்து உள்ளது.

நாட்டின் தொழில் துறையில் 77 சதவீத பங்களிப்பை வழங்கும் தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஆண்டு செப்டம்பரில் இரண்டு சதவீதமாக இருந்தது, நடப்பாண்டு செப்டம்பரில் 4.50 சதவீதமாக ஏற்றம் கண்டுள்ளது. மின்சார உற்பத்தி வளர்ச்சி 9.90 சதவீத உயர்வைக் கண்டுள்ளது.

இதே காலத்தில், மின்சாரத் துறையின் உற்பத்தி, 11.60 சதவீத வளர்ச்சியில் இருந்து, 9.90 சதவீதமாக பின்னடைவைக் கண்டுள்ளது.சுரங்க உற்பத்தி வளர்ச்சியை பொறுத்தவரை, கடந்த ஆண்டு செப்டம்பரில் 5.20 சதவீதமாக குறைந்திருந்த நிலையில் தற்போது 11.50 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel