உலக மக்கள்தொகை கடந்த செப்டம்பரில் 800 கோடியைக் கடந்துவிட்டது. 2022 நவம்ரிலேயே உலக மக்கள்தொகை இந்த எண்ணிக்கையை அடைந்துவிட்டதாக ஐ.நா.சபை குறிப்பிட்டிருந்தது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு முறை நாட்டுக்கு நாடு வேறுபடுவதால் இந்த முரண்பாடு நிலவி வருகிறது. ஆனால் தொடர்ந்து உலக மக்கள்தொகை உயா்ந்து கொண்டே வருகிறது.
2000ம் ஆண்டு உலக மக்கள் தொகை 600 கோடி. தற்போது 800 கோடியாக அதிகரித்துள்ளது. மக்களின் சராசரி வயது 32ஆக அதிகரித்துள்ளது. 2060-ம் ஆண்டு அது 39-ஆக உயரும்.
கனடா போன்ற நாடுகளில் முதியோா்களின் இறப்பு விகிதம வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 1960-2000 வரையிலான காலகட்டத்தில் உலக மக்கள்தொகை வளா்ச்சி விகிதம் 2 மடங்காக இருந்த நிலையில், தற்போது குறைந்துள்ளது.
பெண்கள் இயற்கை முறையில் கருத்தரிப்பது தொடா்ச்சியாக குறைந்து வருவதால் கடந்த 50 ஆண்டுகளாக உலக மக்கள்தொகை குறைவான விகிதத்தில் அதிகரித்து வருவதற்கான கூறப்பட்டுள்ளது.
இந்த செய்திக்குறிப்பின் படி அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களின் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி டோக்கியோவின் மக்கள் தொகை 3,71,94,105 ஆக உள்ளது.
பட்டியலில் டெல்லி 3,29,41,309 மக்கள் தொகையுடன் 2ம் இடத்திலும், சீனாவின் ஷாங்காய் 2,92,10,808 மக்களுடன் 3ம் இடத்திலும் உள்ளன. 2,12,96,517 மக்களுடன் மும்பை 9வது இடத்திலும், 1,53,32,793 மக்களுடன் கொல்கத்தா 17வது இடத்திலும், 1,36,07,800 மக்களுடன் பெங்களூரு 23வது இடத்திலும், 1,17,76,147 மக்களுடன் சென்னை 26வது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments