சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஆதித்யாஎல்-1 விண்கலத்தை அனுப்பியுள்ளது. இது சூரியனின் எல்-1 பகுதியை நோக்கி சீரான வேகத்தில் பயணித்து வருகிறது. இந்நிலையில் ஆதித்யாவிண்கலம் தனது பயணத்தின்போது மேற்கொண்ட சில ஆய்வு முடிவுகளை இஸ்ரோ வெளியிட்டது.
ஆதித்யாவில் உள்ள ஹெல்1ஒஎஸ் எனும் எக்ஸ்ரேஸ்பெக்ட்ரோமீட்டர் கருவியானது அக்டோபர் 29-ம் தேதி சூரிய கதிர்வீச்சின் ஒளி அலையை பதிவு செய்துள்ளது. இவை அமெரிக்காவின் ஜிஒஇஎஸ் விண்கலம் ஏற்கெனவே வழங்கிய தரவுகளுடன் ஒத்துப்போகிறது.
இந்த தகவல்கள் சூரிய கதிர்வீச்சின் மூலம் வெளிப்படும் ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் தொடர்பான ஆய்வை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஹெல்1ஒஎஸ் கருவி சூரியனில் இருந்து வெளியேறும் எக்ஸ்ரே கதிர்களை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது. அந்த கதிர்களின் வாயிலாக உருவாகும் வெப்ப ஆற்றலையும் அதன்மூலம் அறிய முடியும். பெங்களூர் யூஆர்ராவ் செயற்கைக்கோள் மையம் இந்த கருவியை தயாரித்தது''என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே புவியில் இருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள சூரியனின் எல்-1பகுதி அருகே சென்றதும் விண்கலம் அதை மையமாக கொண்ட சூரிய ஒளிவட்டப் பாதையில் (Halo Orbit) நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments