குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஹெபத்பூரில் நேற்று நடைபெற்ற 2023 உலகளாவிய மீன்வள மாநாட்டை குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் தொடங்கி வைத்து பேசினார்.
குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் பேசியதாவது மாநிலத்திற்கு இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள். இன்று 'கோல்' வகை மீன்களை மாநில மீனாக அறிவிக்கிறோம்.
கோல் மீன் குஜராத் ஏற்றுமதி செய்யும் விலை உயர்ந்த மீன்வகைகளில் ஒன்றாகும். இதனை மாநில மீனாக அறிவிப்பதால் கோல் வகை மீன்களை பற்றிய விழிப்புணர்வு உண்டாகும்.
0 Comments