'இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி'யின் 'அமைச்சகம் மற்றும் துறை' பிரிவில் சிறந்த செயல்பாட்டிற்காக ஆயுஷ் அமைச்சகத்துக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. மொத்தம் 18 புத்தொழில் நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்புகளை ஆயுஷ் அரங்கில் காட்சிப்படுத்தின.
ஆயுஷ் உணவுமுறை, புதுமையான ஆயுஷ் தயாரிப்புகள், யோகா தெரபி வகுப்புகள், மனோபாவம் மற்றும் இயற்கை சோதனை, மருத்துவ ஆலோசனை, படைப்பாற்றல் விளையாட்டுகள், கற்றல் ஆகியவை முக்கிய கவனத்தை ஈர்த்தன.
ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி, யோகா-இயற்கை மருத்துவம், சோவா-ரிக்பா முறைகள் குறித்து பார்வையாளர்கள் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றனர். ஆயுஷ் அரங்கில், ஆயுஷ் துறையில் இளைஞர்களுக்கு தொழில் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியின் 'அமைச்சகங்கள் மற்றும் துறைகள்' பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆயுஷ் அமைச்சகத்திற்கு 'இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு' தங்கப் பதக்கம் வழங்கியுள்ளது.
ஆயுஷ்-தொழில்முனைவை ஊக்குவிப்பதற்காக, மொத்தம் 18 ஆயுஷ் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆயுஷ் அமைச்சகத்தால் புதிய தயாரிப்புகளுடன் அரங்கில் காட்சிப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது.
0 Comments