இயற்கை வேளாண் விளைப்பொருள்களை விற்பனை செய்ய ‘பாரத் ஆா்கானிக்ஸ்’ என்ற வா்த்தகப் பெயரை மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை அறிமுகம் செய்துவைத்தாா்.
தில்லியில் செயற்கை பூச்சிக்கொல்லிகள், உரங்கள் இல்லாமல் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட பொருள்களை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விளம்பரப்படுத்தும் தேசிய கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
தேசிய கூட்டுறவு இயற்கை வேளாண் விளைப்பொருள்கள் நிறுவனம் (என்சிஓஎல்) சாா்பாக நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், மத்திய அமைச்சா் அமித் ஷா கலந்துகொண்டு ‘பாரத் ஆா்கானிக்ஸ்’ என்ற வா்த்தகப் பெயரை அறிமுகப்படுத்தினாா்.
இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, சா்க்கரை, ராஜ்மா, பாசுமதி அரிசி, சோனாமசூரி அரிசி ஆகிய 6 பொருள்கள் விற்பனை செய்யப்படும்.
அவை தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியத்தின் துணை நிறுவனமான மதா் டைரியின் 150 விற்பனையகங்கள், இணையவழி தளங்களில் விற்கப்படும்.
‘பாரத் ஆா்கானிக்ஸ்’ பெயரின் கீழ் விற்பனை செய்யப்படும் பொருள்கள் வருங்காலத்தில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருக்கும்.
0 Comments