பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 01.04.2023-ம் ஆண்டு முதல் 31.03.2026 வரை ரூ.1952.23 கோடி (மத்திய அரசின் பங்காக ரூ.1207.24 கோடி மற்றும் மாநில அரசின் பங்காக ரூ.744.99 கோடி) மத்திய அரசின் நிதியுதவித் திட்டமாக விரைவு சிறப்பு நீதிமன்றத்தைத் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது. நிர்பயா நிதியில் இருந்து மத்திய அரசின் பங்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் 02.10.2019 அன்று தொடங்கப்பட்டது.
பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் நாட்டை மிகவும் பாதித்துள்ளன. இத்தகைய சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளின் நீண்டகால விசாரணைகளை விரைவுபடுத்துவதற்கும், வன்கொடுமைக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கும் ஒரு சிறப்பு நீதிமன்ற அமைப்பை நிறுவ வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இதன் விளைவாக, வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை உள்ளடக்கிய "குற்றவியல் சட்டம் (திருத்தம்) சட்டம் 2018" ஐ மத்திய அரசு இயற்றியது, இது விரைவு சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்க வழிவகுத்தது.
சிறப்பு நீதிமன்றங்களாக வடிவமைக்கப்பட்ட விரைவு நீதிமன்றங்கள், விரைவாக நீதி வழங்குவதை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நிவாரணத்தை வழங்குகிறது,
100-க்கும் மேற்பட்ட போக்சோ சட்ட வழக்குகள் உள்ள மாவட்டங்களுக்கு சிறப்பு போக்சோ நீதிமன்றங்களை அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு அக்டோபரில் ஓராண்டு காலத்திற்குத் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு 31.03.2023 வரை நீட்டிக்கப்பட்டது.
தற்போது, நிர்பயா நிதியில் இருந்து மத்திய அரசின் பங்களிப்புடன், 1952.23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், இத்திட்டம் 31.03.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
0 Comments