இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்குத் தொலைக்காட்சி அலைவரிசையான கலர்ஸ், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் 'பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' என்ற முன்முயற்சியுடன் இணைந்து செயல்படுகிறது. பெண் குழந்தைகளைக் கைவிடும் பிரச்சினையை நிவர்த்தி செய்ய புதிய புனைக்கதை நிகழ்ச்சியான “டோரீ” என்ற இந்த நிகழ்ச்சியை கலர்ஸ் ஒளிபரப்புகிறது.
பெண் குழந்தைகள் கைவிடப்படுவதன் சமூக தீமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை கலர்ஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது. டோரீ தொடர் 2023 நவம்பர் 6 முதல் கலர்ஸ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
0 Comments