Recent Post

6/recent/ticker-posts

ஆயுதப்படைகளில் பெண் வீரர்களுக்கு மகப்பேறு, குழந்தைப் பராமரிப்பு மற்றும் குழந்தைத் தத்தெடுப்பு தொடர்பான விடுப்புகளை அவர்களின் அதிகாரிகளுக்கு இணையாக வழங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒப்புதல் / Defense Minister approves grant of maternity, child care and adoption leave to female soldiers in armed forces at par with their officers

ஆயுதப்படைகளில் உள்ள பெண் வீரர்கள், பெண் மாலுமிகள் மற்றும் பெண் விமானப் படை வீரர்களுக்கு மகப்பேறு, குழந்தைப் பராமரிப்பு மற்றும் குழந்தைத் தத்தெடுப்பு தொடர்பான விடுப்புகளை அவர்களின் அதிகாரிகளுக்கு இணையாக வழங்குதற்கான முன்மொழிவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். 

இந்தப் புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளதன் மூலம், பாதுகாப்புப் படைகளில் உள்ள அனைத்து பெண்களுக்கும், ஒருவர் அதிகாரியாக இருந்தாலும் அல்லது வேறு எந்தப் பதவியில் இருந்தாலும், இத்தகைய விடுப்புகள் சம அளவில் கிடைக்கும்.

ஆயுதப்படைகளில் அனைத்து பெண்களுக்கும், அவர்களின் பதவிகளைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் உள்ளடக்கிய பங்கேற்பு என்ற பாதுகாப்பு அமைச்சரின் பார்வைக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

விடுப்பு விதிகளை அனைவருக்கும் ஒரே மாதிரியாக விரிவுபடுத்துவது என்பது, ஆயுதப்படைகளுடன் தொடர்புடைய அனைத்துப் பெண்கள் மற்றும் அவர்கள் சார்ந்த குடும்பத்தினருக்குப் பயனளிக்கும். 

இந்த நடவடிக்கை ராணுவத்தில் பெண்களின் பணிச் சூழலை மேம்படுத்துவதோடு, தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையை சிறந்த முறையில் சமநிலைப்படுத்த உதவும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel