கர்நாடகாவின் பெங்களூரில் மூன்று நாள் 'இந்தியா உற்பத்தி கண்காட்சியை' பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2023, நவம்பர் 02 அன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியை லகு உத்யோக் பாரதி & ஐஎம்எஸ் அறக்கட்டளை, பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தித் துறை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. 'இந்தியாவில் உற்பத்தி, உலகுக்கான உற்பத்தி' என்பது இந்தக் கண்காட்சியின் மையப்பொருளாகும்.
ஆறாவது 'இந்தியா உற்பத்தி கண்காட்சி' விண்வெளி மற்றும் பாதுகாப்புப் பொறியியல், ஆட்டோமேஷன், ரோபோடிக்ஸ், ட்ரோன்கள் போன்ற பல்வேறு துறைகளில் தங்கள் தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உபகரணங்கள் ஆகியவற்றைப் பங்கேற்பாளர்களுக்குக் காட்சிப்படுத்தும் தளத்தையும் வணிக மற்றும் அறிவுப் பகிர்வு வாய்ப்புகளையும் வழங்கும். சிறந்த சிந்தனைகள், சிறந்த தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை ஒன்றிணைப்பதே இதன் நோக்கமாகும்.
0 Comments