Recent Post

6/recent/ticker-posts

கூர்நோக்கு இல்லங்கள் மேம்பாடு - முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஒரு நபர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு / Development of Kuronoku Houses - One-man committee report submission to Chief Minister M.K. Stalin

கூர்நோக்கு இல்லங்கள் மேம்பாடு - முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஒரு நபர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு / Development of Kuronoku Houses - One-man committee report submission to Chief Minister M.K. Stalin

இளைஞர் நீதி அமைப்பின்கீழ் செயல்பட்டுவரும் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத்திறன்களை மேம்படுத்தும் பொருட்டு, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சார்பாக ஒரு பிரதிநிதியும் உள்ளடக்கிய உயர்மட்டகுழு ஒன்று உருவாக்கப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும்விதமாக, கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதியன்று இளைஞர் நீதி அமைப்பின்கீழ் செயல்பட்டுவரும் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து அரசு ஆணையிட்டது.

அதன்படி, சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழுவானது கடந்த மே மாதம் 2ஆம் தேதி முதல் பொறுப்பேற்றதுடன் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்த ஏதுவாக பொதுமக்களின் கருத்துக்கள் கோரப்பட்டது.

அதோடு மட்டுமல்லாது மேற்படி ஒரு நபர் குழுவானது மாநிலத்தில் செயல்பட்டுவரும் அனைத்து கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு மேற்கொண்டது.

இந்த நிலையில், ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழுவானது, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் நீதியரசரின் ஆய்வின் அடிப்படையில் முழுமையான அறிக்கை தயாரித்து, அதனை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கியது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel