இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று (நவ.,6) டில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 24.2 ஓவரில் 135 ரன்னுக்கு 4வது விக்கெட்டை இழந்தது. அடுத்து ஆல்ரவுண்டர் மாத்யூஸ் களமிறங்கினார்.கிரிக்கெட் விதிப்படி, 2 நிமிடத்திற்குள் களத்திற்குள் வந்து முதல் பந்தை எதிர் கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.
ஆனால் அவர் களத்திற்குள் வந்த உடனே ஹெல்மெட் பிரச்னை காரணமாக வேறு ஹெல்மெட் கேட்டார். இதனால் அடுத்த பந்து வீசுவது மேலும் தாமதமானது.
இதனால் வங்கதேச வீரர்கள் நடுவரிடம் முறையிட்டனர். காலதாமதம் ஏற்படுத்தியதற்காக மாத்யூஸூக்கு நடுவர் 'அவுட்' கொடுத்தார். மாத்யூஸ் இது குறித்து நடுவர் மற்றும் வங்கதேச அணியின் கேப்டன் சாகிப் அல் ஹசன் ஆகியோரிடம் முறையிட்டார்.
ஆனால் இருவரும் விதிப்படி அவுட் என கூறினர். இதனால் கோபமாக வெளியேறிய மாத்யூஸ், 'ஹெல்மெட்டை' பவுண்டரி லைனுக்கு அருகில் எறிந்துவிட்டு 'டிரஸ்சிங் ரூம்' சென்றார்.
இதன்மூலம் ஒருநாள் அரங்கில் பேட்டிங் செய்ய தாமதம் செய்ததால், 'டைம்டு அவுட்' முறையில் அவுட்டான முதல் வீரர் ஆனார் மாத்யூஸ்.
0 Comments