ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார சேவைகள் வழங்க கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 1.6 லட்சம் ஆயுஷ்மான் பாரத் யோஜனா உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக மத்திய அரசு, ‘ஆயுஷ்மான் பாரத்’ என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்கீழ், ‘ஆயுஷ்மான் பாரத்-சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள்’ அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த மையங்களின் பெயரை ‘ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்’ என்று மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பெயர் மாற்றத்தை அமல்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.
பெயர் மாற்றப்பட்ட மையங்களின் புகைப்படத்தை, ‘ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள்’ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
0 Comments