சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசி - உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு விதிமுறைகளை வகுத்து வழி நடத்தி வருகிறது. ஒரு நாட்டின் கிரிக்கெட் அணியின் அடிப்படை விதி முதல், ஒரு தனிப்பட்ட கிரிக்கெட் வீரரின் தனிப்பட்ட விதி வரை ஐசிசியின் விதை இருந்திட கூடும்.
ஒரு அணி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்றால் நிச்சயம் ஐசிசியின் முழுமையான உறுப்பினராக அல்லது இணை உறுப்பினராக இருந்திட வேண்டும்.
ஐசிசியில் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளின் கீழ், அந்நாடுகள் எடுக்கும் முடிவுகளுக்கு ஐசிசி ஒப்புதல் அளிக்கும். ஐசிசியின் விதிமுறைகளை மீறினால் அதற்கு வெகுமதியாக அந்த குறிப்பிட்ட நாடானது, ஐசிசியின் உறுப்பினர் உரிமத்தை இழந்திட கூடும்.
இவ்வாறு விதிகளை மீறியதால் தான், தற்போது சிக்கலை சந்தித்து வருகிறது இலங்கை கிரிக்கெட் வாரியம். நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் படு மோசமான திறன் காரணமாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது இலங்கை அணி.
இதனை ஏற்க முடியாத இலங்கை அரசாங்கம், நேரடியாக களத்தில் குதித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து, அதை நிர்வகிக்க 7 பேர் கொண்ட குழுவையும் தற்காலிகமாக அமைத்தது.
இதுகுறித்து ஐசிசியிடம் ஆலோசனை செய்யாமல், விதிகளுக்கு புறம்பாக குழு அமைக்கப்பட்டதால், ஐசிசி உறுப்பினர் விதிகளை மீறியதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை உறுப்பினர் உரிமத்தில் இருந்து உடனடியாக நீக்கி உத்தரவிட்டது ஐசிசி.
0 Comments