நெதர்லாந்தின் ஹேக்கில் மருத்துவ தயாரிப்பு ஒழுங்குமுறை மற்றும் மருத்துவ தயாரிப்புகள் மற்றும் சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும், நெதர்லாந்தும் கையெழுத்திட்டுள்ளன.
நெதர்லாந்தின் சுகாதாரம், நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. எர்னஸ்ட் குய்பர்ஸுடன் மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் திரு. பகவந்த் குபா நடத்திய சந்திப்பின் போது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
நவம்பர் 6 முதல் 8 வரை நெதர்லாந்தில் நடைபெறும் இரண்டாவது உலக உள்ளூர் உற்பத்தி மன்றக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திரு குபா தலைமையிலான இந்திய தூதுக்குழு நெதர்லாந்து சென்றுள்ளது.
உலக உள்ளூர் உற்பத்தி தளம் என்பது மருந்துகள் மற்றும் பிற சுகாதார தொழில்நுட்பங்களுக்கான அணுகலை அதிகரிக்கும் நோக்கத்துடன் உலக சுகாதார அமைப்பின் முன்முயற்சியில் உருவாக்கப்பட்ட ஒரு தளமாகும் இது.
0 Comments