'மன் கி பாத்' நிகழ்ச்சியின் 106-வது பகுதியில் மக்களிடையே உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, பண்டிகை நாட்கள் மற்றும் சிறப்பு தருணங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அவரது தலைமையின் கீழ் “உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்” என்ற உணர்வை வலுப்படுத்தும் வகையில், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் திரு மனோஜ் குமார் புதுதில்லி, கன்னாட் பிளேஸில் உள்ள கதர் துறை கட்டிடத்தில் ஐந்து நாள் 'தீபாவளி விழாவை' தொடங்கி வைத்தார்.
பிரதமரின் வேண்டுகோளுடன் தில்லி மக்களை இணைக்கும் வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் சாமானிய மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, 'தீபாவளி விழாவின்போது சிறப்பு அளவிலான உள்ளூர் தயாரிப்புகள் கிடைக்கின்றன.
கதர் பொருட்கள் விற்கப்படும்போது, அவை கிராமப்புற இந்தியாவில் பணிபுரியும் கைவினைஞர்களுக்கு பொருளாதார தற்சார்பை வழங்குகின்றன.
0 Comments