மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்தர் குமார், துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் இஸ்கான் மூத்த உறுப்பினர்கள் முன்னிலையில் இன்று புதுதில்லியில் போதைப் பொருள் இல்லாத இந்தியா திட்டம்- சர்வதேச கிருஷ்ண உணர்வு சங்கம் ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இஸ்கான் உடனான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் போன்றோரிடையே போதைப் பொருள் இல்லாத இந்தியா திட்டத்தின் செய்தியைப் பரப்ப உதவும்.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கத்தைக் குறைப்பது மட்டுமின்றி அதனை நிரந்தரமாக நிறுத்துவதும் ஆகும்.
0 Comments