தேசிய சுங்கம், மறைமுக வரிகள், போதைப்பொருள் தடுப்பு அகாடமி மற்றும் தேசிய நேரடி வரிகள் அகாடமி இடையே சிறந்த நடைமுறைகள், புதுமையான தொழில்நுட்பங்கள் போன்ற வளங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (24.11.2023) கையெழுத்தானது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசிய நேரடி வரிகள் அகாடமி முதன்மைத் தலைமை இயக்குநர் திரு ஜெயந்த் திதி மற்றும் தேசிய சுங்கம், மறைமுக வரிகள், போதைப்பொருள் தடுப்பு அகாடமி தலைமை இயக்குநர் திரு கே.என்.ராகவன் கையெழுத்திட்டனர்.
வரிவிதிப்பு, சட்ட நடைமுறைகள், வணிக நடைமுறை சட்டங்கள், பொருளாதார மற்றும் நிர்வாகச் சட்டம், தரவு பகுப்பாய்வு, இடர் மேலாண்மை போன்றவற்றில் அறிவுப் பகிர்வு, வளங்கள் பகிர்வு மற்றும் பல்வேறு பிரிவுகளில் கூட்டு ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்
0 Comments