தேசிய தலைநகர் பிராந்தியத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களில் தூசிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் திறம்பட செயல்படுத்துவதைக் கண்காணிக்க, காற்றின் தரக் குறியீட்டை மேம்படுத்துவதற்காகக் காற்றுத் தர மேலாண்மை ஆணையம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 'தூசி மற்றும் கட்டுப்பாட்டு மேலாண்மை மையத்தை' அமைத்துள்ளது.
காற்றின் தரம் மற்றும் தூசி அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, தேசிய நெடுஞ்சாலை கட்டுமான தளங்களில் தற்போதுள்ள தூசி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மறுஆய்வு செய்யுமாறும், காற்றுத் தர மேலாண்மை ஆணையம் / மத்திய , மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதன் ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தியுள்ளது.
கட்டுமான தளங்களில் எடுக்கப்பட வேண்டிய தூசி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் முடிக்கப்பட்ட திட்டங்களில் துடைக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துதல், அனைத்துக் கட்டுமான தளங்களிலும் நாள் முழுவதும் தண்ணீர் தெளித்தல், கட்டுமானம் மற்றும் இடிப்புப் பொருட்களை பச்சை வலை அல்லது துணியால் மூடுதல் ஆகியவை அடங்கும்.
இந்த வழிகாட்டுதல்களுக்கு இணங்க, பிராந்தியத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை கட்டுமான தளங்களில் தூசி கட்டுப்பாட்டை அதிகரிக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதி செய்கிறது.
0 Comments