தேசிய உரங்கள் லிமிடெட் (NFL) நிறுவனத்தில் Management Trainees காலிப்பணியிடங்கள்
NATIONAL FERTILIZER LIMITED RECRUITMENT 2023
National Fertilizers Limited (NFL) நிறுவனத்தில் Management Trainees பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 01-12-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Management Trainees - 74
தகுதி
NFL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Bachelors Degree / MBA / PGDBM / PGDM / Degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
NFL பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
NFL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வரை இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செயல்முறை
NFL பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
NFL பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (01.12.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments