Recent Post

6/recent/ticker-posts

ஸ்பெயின் பிரதமராக பெட்ரோ சான்செஸ் மீண்டும் தேர்வு / Pedro Sánchez re-elected as Prime Minister of Spain

ஸ்பெயின் பிரதமராக பெட்ரோ சான்செஸ் மீண்டும் தேர்வு / Pedro Sánchez re-elected as Prime Minister of Spain

ஸ்பெயினில் ஜூனில் நடந்த தேர்தலில் மத்திய வலது பாப்புலர் கட்சி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றது. ஆனால் மூன்றாவது இடத்தை பிடித்த தீவிர வலதுசாரி வோக்ஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் அரசு அமைப்பதற்கான ஆதரவை பெற முடியவில்லை. 

இந்நிலையில் பொறுப்பு பிரதமராக இருந்த பெட்ரோ சான்செஸின் சோசலிச கட்சியானது 121 இடங்களை பிடித்து இரண்டாவது இடத்தை பிடித்தது. ஆனால் ஆட்சி அமைப்பதற்கு போதுமான ஆதரவை பெறவேண்டி இருந்தது.

இந்நிலையில் 2 நாட்கள் விவாதத்திற்கு பிறகு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பில் 350 உறுப்பினர்கள் கொண்ட கீழவையில் 179 பேர் பெட்ரோ சான்செஸ்சுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 

வலது சாரி எதிர்கட்சிகள் மட்டும் அவருக்கு எதிராக வாக்களித்திருந்தனர். இதனை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமராக பெட்ரோ சான்செஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel