Recent Post

6/recent/ticker-posts

தமிழகத்தில் மாஞ்சா நூலுக்கு நிரந்தர தடை - அரசாணை வெளியீடு / Permanent ban on Mancha in Tamil Nadu

தமிழகத்தில் மாஞ்சா நூலுக்கு நிரந்தர தடை - அரசாணை வெளியீடு / Permanent ban on Mancha in Tamil Nadu

காற்றாடி பறக்கவிடும் போட்டிகளின் போது மனிதா்களுக்கும் விலங்குகளுக்கும் குறிப்பாக பறவைகளுக்கும் பலத்த காயங்கள், உயிரிழப்புகள் ஏற்பட மாஞ்சா நூலே காரணமாக உள்ளது.

மேலும், இவை வடிகால் பாதைகள், நீா்நிலைகளை அடைப்பதன் மூலம் கடுமையான சுற்றுச்சூழல் சீா்கேட்டை ஏற்படுத்துகின்றன. இது பறவைகள், பிற விலங்கினங்களுக்கு மிக ஆபத்தான சூழலை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில் விலங்குகள், பறவைகள், பொதுமக்கள் உயிரைப் பாதுகாக்கும் பொருட்டு மாஞ்சா நூல் என பிரபலமாக அறியப்படும் நைலான், நெகிழி அல்லது செயற்கை பொருள்களால் தயாரிக்கப்படும் மக்கும் தன்மையற்ற காற்றாடி நூலுக்கு அரசு முழுமையான தடை விதித்துள்ளது. 

அதன்படி, மாஞ்சா நூல் தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்தல், கொள்முதல் செய்தல், இறக்குமதி செய்தல், பயன்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் முழுமையாக தடை செய்யப்படுகிறது.

இது தொடா்பாக அக்.6-ஆம் தேதி உத்தரவு வெளியிடப்பட்டு, அக்.30-ஆம் தேதி தமிழ்நாடு அரசிதழில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையில் அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், வனத் துறை வனச்சரகா்கள், அதற்கும் மேல்நிலை அதிகாரிகள், தமிழ்நாடு காவல் துறை உதவி ஆய்வாளா்கள், அதற்கும் மேல்நிலை அதிகாரிகள், நகராட்சி, மாநகராட்சி ஆணையா்கள், உள்ளாட்சி அதிகாரிகளுக்கு மேற்படி அறிவிப்பை செயல்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை உத்தரவை மீறுபவா்களுக்கு சுற்றுச்சூல் (பாதுகாப்பு) சட்டம், 1986-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel